2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுமந்திரனை கொலை செய்ய சதி

Princiya Dixci   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

சாவகச்சேரி, தமிழரசுக் கட்சி அலுவலகத் திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

 'சாவகச்சேரி மறுவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த அங்கியை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தியிருந்த பிரதான சூத்திரதாரி இன்னமும் கைது செய்யப்படவில்லை.

மேற்படிநபர், சாவகச்சேரியில் எனது அலுவலகத்துக்கு எதிரே உள்ள வீட்டில் தங்கி இருந்து கொண்டு, எனது அலுவகத்துக்கு அடிக்கடி வந்து போன, சுமந்தினை, வேவு பார்த்துள்ளார்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X