2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

செயற்கை வெள்ள அபாயம்

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய சூழலில் செயற்கையாக தேங்கியுள்ள மழை வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான வழிகளை உருவாக்குமாறு அக்கராயன் கிராம அலுவலர் பசுபதி சபாரட்ணத்திடம், அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர், அக்கராயன் மகா வித்தியாலய சூழலில் குடும்பங்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவ்வாறு காணி பகிர்ந்தளிக்கப்பட்டவர்கள் இப்பகுதியில் இயற்கையாக வெள்ளம் ஓடுகின்ற பகுதியினை மறித்து வரம்புகள் அமைத்து காணிகளை வேலிகளை அமைத்திருப்பதன் காரணமாக அவ் வழியாக ஓடவேண்டிய மழை வெள்ளம் தேங்கி குடியிருப்புக்களுக்குள் நிற்கின்றது.

இத்தடைகளை நீக்கி இயல்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வழிகளை உருவாக்குமாறு கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகத்தினால் அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டுள்ள போதிலும் இப்பகுதியிலுள்ள பலர் ஆற்றுப்பகுதிக் காணியினையும் பலவந்தமாகப் பிடித்துள்ள சிலர், தடைகளை உருவாக்கி இருப்பதன் காரணமாகவே செயற்கை வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலே உயரமான இடங்களில் ஒன்றாக அக்கராயன் பகுதி விளங்குகின்ற சூழலில், மழை வெள்ளம் தேங்கி நிற்கக் கூடிய நிலைமை இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X