Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜமாலடீன்
அரசாங்க பாடசாலைகளில் க.பொ.த உயர்தர தொழில்நுட்பவியல் பாடத்துறையில், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்;களுக்கான பயிற்சி செயலமர்வு இம்மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளதென விரிவுரையாளர் கலாநிதி என்.முகுந்தன் தெரிவித்தார்.
ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதி, உணவு, கொடுப்பனவு என்பன வழங்கப்படவுள்ளது.
முதல் நாள் இரவு விடுதி வசதி தேவைப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் செயலமர்வு தினத்திற்கு முன்தினம் பிற்பகல் கலட்டி மிலேனியம் விருந்தினர் விடுதிக்கு சமூகமளித்து விடுதி வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
இது தொடர்பாக சகல மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் கடிதம் கிடைக்காத ஆசிரியர்களும் கலந்துகொள்ள முடியும் எனவும் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் கலந்துகொண்டு அழைப்புக் கடிதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மொழிமூலம் சகல செயற்பாடுகளும் நடைபெறும் எனவும் இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 071 4598055 எனும் இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலம் தெரிவித்தார்.
36 minute ago
2 hours ago
5 hours ago
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
5 hours ago
17 Jul 2025