2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சார்ள்ஸை விசாரித்தால் தகவல் கிடைக்கும்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பொறுப்பாளராக 2006ஆம், 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சார்ள்ஸ் என்பவரை விசாரணை செய்தால், காணாமற்போனோர் தொடர்பில் பல உண்மைகள் தெரியவரும் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி  ஆணைக்குழுவின் முன்னிலையில், மக்கள் கூறினர்.

மேற்படி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, சாட்சியமளித்த மக்கள் இவ்வாறு கூறினர்.

இதில் தந்தையொருவர் சாட்சியமளிக்கையில்,

மகன் காணாமற்போனமை தொடர்பில் ஈ.பி.டி.பி அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த சார்ள்ஸை நான் சந்தித்தேன்.

இதன்போது, 'உங்கள் மகனா அவர்?, இராணுவ முகாமில் அவனை நான் தான் விசாரித்தேன்' என எனக்கு கூறினார்.

இதனடிப்படையில், தென்மராட்சியில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சாள்ஸுக்கு முழு விபரமும் தெரிந்திருக்கும்.

அவரிடம் விசாரணை செய்தால் காணாமற்போனோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X