Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர்.
வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, யாருமற்ற இடத்தில் வைத்து, சாரதியை தாக்கியுள்ளதுடன் முச்சக்கரவண்டியுடன் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அவ்வழியாக வந்த பொதுமகனின் உதவியுடன், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி, முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வளலாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
4 hours ago