2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

அச்செழு, பூலசிட்டி பகுதியில் 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 17 வயதுச் சிறுவனை, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்குமாறு, யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (28) வீட்டில் யாரும் இல்லாத வேளையில், சிறுமியின் வீட்டுக்குச் சென்ற குறித்த சிறுவன், சிறுமியை அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதை, சிறுமியின் தந்தை கண்டதையடுத்து சிறுமியை விட்டு விட்டு சிறுவன் தப்பி ஓடியுள்ளான்.
இது தொடர்பில் சிறுமியின் தந்தை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட சிறுவனை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X