2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுமிகளுக்கு சீர்திருத்தப்பள்ளி வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாவட்டத்தில் சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி இல்லாததன் காரணமாக, அவர்கள் வேறு சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் சிறுமிகள் பெரும்பாலானோர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் யாழ். மாவட்ட ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் பொண்கள் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி அமைப்பதற்கு சுமார் 450 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. இதனைக் கொண்டு அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள 24 ஏக்கர் காணியில் சிறுமிகளுக்கு பிறிதொரு சீர்திருத்தப்பள்ளியை அமைக்க முடியும் என்றார்.  

இதன்போது, குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

சீர்திருத்தப்பள்ளி அமைப்பதற்கு 24 ஏக்கர் காணிகள் தேவையில்லை. ஓரிரு ஏக்கர்களை எடுத்துக்கொண்டு மிகுதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றார்.

இதற்கு பதிலளித்த ஆணையாளர்,

மேற்படி காணியில் சீர்திருத்தப்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்;டு மைதானம், விவசாய பண்ணை ஆகியன அமைக்கப்பட வேண்டும் என்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X