2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாடசாலை செல்லும் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய கற்கோவளம் புனித நகர் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொ.சுப்பிரமணியம், வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

அத்துடன், சிறுமியை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

கற்கோவளம் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும், அதே பகுதியினை சேர்ந்த 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த 01ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்துகொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வியாழக்கிழமை (07) கைதான இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது வழக்கினை விசாரித்த நீதிவான், இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X