2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுமியை முத்தமிட்டவர் கைது

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், சுண்டுக்குழி பகுதி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியொருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 6 மணியளவில், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மேற்படி சிறுமியை, வெளியில் அழைத்துச்சென்றுள்ள சந்தேகநபரான இளைஞன், அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். அங்கிருந்து விரைந்து, வீட்டுக்குள் சென்ற சிறுமி, இது தொடர்பில் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம், தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் தாயார் செய்த முறைப்பாட்டைத்  தொடர்ந்து, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X