Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 31 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தொண்டமனாறு அக்கரை கடற்கரையை சுற்றுலா கடற்கரையாக மாற்றும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது என வலி கிழக்கு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பிரதேச சபையின் 1 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது அங்கு மலசலகூட வசதிகள், மின்சார வசதிகள், மற்றும் உடை மாற்றுவதற்குரிய அறைகள் என்பன கட்டப்பட்டுள்ளன. கடற்கரையை அண்டிய பகுதியில் தென்னங்கன்றுகள், சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக்குடில்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீமெந்திலான இருக்கைகள், கற்கள் பாதிக்கப்பட்ட நடைபாதைகள் என்பன பதிக்கப்பட்டு இக் கடற்கரை தற்போது அழகு மையப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அக்கரை கடற்ரையில் மாலை நேரங்களில் பொழுதை கழுப்பதற்கு நீச்சலில் ஈடுபடுவதற்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருவதை அவதானிக்க முடிகின்றது.
உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாது, தென்னிலங்கை சுற்றுலா பயணிகளும் இக்கடற்கரைக்கு வந்து பொழுதை கழித்து வருகின்றனர்.
இக் கடற்கரை வலி-கிழக்கு பிரதேச நிர்வகிப்பின் கீழ் உள்ளடங்குவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் வீதிகளில் பெயர் பலகைகள் பொறிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இக் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளால் சபைக்கு வருமானம் கிடைக்கும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.
28 minute ago
1 hours ago
5 hours ago
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
5 hours ago
17 Jul 2025