2025 ஜூலை 23, புதன்கிழமை

சுற்றுலாத்துறைக்கான நிதி அதிகரிப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வட மாகாண சபையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு வட மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்தில் 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த, தொல்பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனவளப்பாதுகாப்பு திணைக்களம் என்பவற்றிடமிருந்து உரிய அனுமதிகள் கிடைக்கப்பெறுவதில் உள்ள தாமதங்கள் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட அமர்வில் சுட்டிக்காட்டினார்.  

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி தனியர் துறையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.2016ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டு, சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்,ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள்,சௌகரியங்கள் உள்ளடங்கிய மையங்களை தனியார் துறையின் பங்களிப்புடன்; உருவாக்குதல்,சுற்றுலாத் துறைக்கான தகவல்களை வெளியிடுதல் மற்றும் அத்துறை சார்ந்த  ஊழியர்களுக்கான  இயலுமை விருத்திப் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது என முதலமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .