Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படுவதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற சிறுவர் அபிவிருத்திக் கூட்டத்தின் போது, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கூட்டமானது சுமார் 6 மாதங்களின் பின்னர் மாவட்டச் செயலர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக ரீதியாக சிறுவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் சேகரித்து வைக்கப்படவில்லையென்பது முதன்மை விடயமாக சுட்டிக்காட்டப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 6 சிறுவர் இல்லங்களில் 567 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பல சிறுவர் துஷ்பிரயோகங்களில், சில வெளியில் தெரியவராமல் மூடி மறைக்கப்படுகின்றதாக இதன்போது அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
இதன்போது, 'வீதி, வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்வதைப் போன்று, சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பில் அக்றை செலுத்த வேண்டும். அப்போதுதான் நல்லதொரு சமூகத்தை கட்டியெழுக்க முடியும்' என மாவட்டச் செயலர் கூறினார்.
அத்துடன், குடும்ப வறுமை காரணமாக சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களின் விவரங்களை சேகரித்து, மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்தால், அந்தக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மேற்கொண்டு மீண்டும் அந்தச் சிறுவர்களை குடும்பங்களில் இணைப்பதற்கு வழி செய்வதாக மாவட்டச் செயலர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸார், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago