Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 28 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபாச வெளியீடுகள் தொடர்பான 1883 தண்டனைச் சட்டக் கோவை மற்றும் 1983 சட்டத்தால் திருத்தப்பட்ட 1927 ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்திலுள்ள சட்ட ஏற்பாடுகள் தற்காலத்துக்கு ஏற்றவாறு போதியதாக இல்லாததன் காரணமாக, தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு புதிய சட்ட மூலம் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதானது வரவேற்கத்தக்கதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் முக்கியமானவை. சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தூண்டுகின்ற பல்வேறு விடயங்கள் நவீன தொழில்நுட்ப புரட்சியுடன் வெகுவாக அதிகரித்துள்ளதொரு கால நிலையில் அதற்கேற்ற வகையிலான சட்ட ஏற்பாடுகள் எமக்கு அவசியமாகின்றன.
இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
4 hours ago
9 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Sep 2025