2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சில்லறைத்தனமாக யோசிக்காதீர்கள்: சி.வி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது. இவற்றில் இருந்து நாம் விடுபட வேண்டும். தமிழினத்தின் தற்போதைய நிலை, அதன் வருங்காலம் பற்றிச் சிந்தித்தால் எமக்குப் பொறுப்புணர்ச்சி தானே வந்து விடும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'செய்வோம் செய்விப்போம்' என்னும் தொனிப்பொருளில் மாகாணக் கண்காட்சியொன்று நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்று (03) நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'யுத்தத்தின் காரணமாக ஒரு கணத்திலேயே பலரின் வாழ்க்கை முறைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டன. அப்போது வாழும் வகை தெரியாது தத்தித் திணறிய பல பெண்கள் இவ்வாறான மகளிர் அமைப்புக்கள் மூலம் தாமும் வாழ்க்கையில் முனைந்து முன்னேறக்கூடியவர்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழினத்தின் தற்போதைய நிலைஇ அதன் வருங்காலம் பற்றிச் சிந்தித்தால் எமக்குப் பொறுப்புணர்ச்சி தானே வந்து விடும். வீண் பொழுதைக் களிப்பதிலும் வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் இருந்து எம்மை விலக்கிக் கொண்டு நாட்டுக்கு நன்மை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .