Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது.
திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குறைந்த செலவில் திருமணம் நடத்தி முடிக்கலாம் என்பதாகும்.
திருமணம் நடத்துவதற்காக ஆலயத்துக்கு 6000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேற்கொண்டு, தானமானது விரும்பிய ரீதியி;ல் வழங்க முடிவதுடன் ஐயருக்கான தட்சணை 500 ரூபாய் தொடக்கம் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
ஆலயத்தைச் சூழ அன்னதான மண்டபங்கள் இருக்கின்றன. அன்னதான மண்டபங்களில், திருமணத்துக்கு வருபவர்கள் உணவருந்தினால் போதும் என்று நினைப்பவர்கள் குறிப்பிட்ட அன்னதான மடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 60 ரூபாய் வரையில் செலுத்தவேண்டும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
மாறாக சுயஉணவுத் தெரிவின் மூலம் உணவளிக்க விரும்புகின்றவர்கள் ஒரு சாப்பாட்டுக்கு 220 ரூபாய் என்ற அடிப்படையில் தங்கள் திருமணத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago