2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுவிஸ்குமாரின் வங்கிக்கணக்கை விசாரிக்க அனுமதி

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார என அழைக்கப்படும் , வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின், வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், சுவிஸ்குமார் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

குறித்த மேலதிக விசாரணைக்காக, சுவிஸ்குமாரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தப்பி செல்ல பணபரிமாற்றம் ஏதேனும் நடைபெற்று உள்ளதா எனது தொடர்பில் 16 வங்கி முகாமையாளர்களை விசாரணை செய்ய மன்று அனுமதிக்க வேண்டும் என கோரி இருந்தனர்.

அதற்கான அனுமதியினை நீதமன்றம் இன்று வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X