Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 25 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன், ரொமேஸ் மதுசங்க
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், இன்று திங்கட்கிழமை (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர், கடந்த வாரம் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி சிகிச்சைக்கு கொண்டு சென்றவர்கள், வைத்தியசாலையில் நின்றவர்களுடன் முரண்பட்டு, அங்கு கடமையாற்றும் சிற்றூழியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago