2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சைவப்புலவர் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டம்

George   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் மாதாந்த விசேட செயற்குழுக் கூட்டம், யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில், எதிர்வரும் டிசெம்பர் மாதம்  3ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி செயற்குழுக் கூட்டத்தில் சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் பட்டமளிப்பு விழா, சைவமாநாடு நடாத்துதல், சைவநாதம்  நூல் வெளியீடு மற்றும் 2017 ஆம் ஆண்டுக்காண சைவப்புலவர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைகள்தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் தாவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்க உப செயலாளர் சைவப்புலவர் எஸ்.டி.குமரன் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X