2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சங்கிலியை அபகரித்த இருவர் கைது

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நவக்கிரி, ஈவினை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீதியால் சென்ற பெண்னின் 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட  இளைஞர்கள் இருவரும் நெல்லியடி கரவெட்டி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார்.

வீதியால் சென்ற குறித்த பெண்னை இடைநடுவில் மறுத்து, கைப்பையினை பறித்து அதில் இருந்த 1,000 ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுத்தெடுத்து சென்றதாக, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் முறைபாடு செய்ததன் பின்னரே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை  அச்சுவேலி பொலிஸார் மேறகொண்வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X