2025 மே 09, வெள்ளிக்கிழமை

சங்காபிஷேகம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி

Niroshini   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

 

சாவகச்சேரி நகர சபை வளாகத்தில் உள்ள கோவிலில் சங்காபிஷேகம் நடத்துவதற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் 27ஆம் திகதியன்று, குறித்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சங்காபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டது.
எனினும், அன்றைய தினம் மாவீரர் தினம் என்பதனால், அன்றைய தினத்தில் சங்காபிஷேகத்தை நடத்த அனுமதி வழங்க முடியாதென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் நாளுக்கும் சங்காபிஷேகத்துக்கும் எவ்வித தொடர்பு இல்லை என, கோவில் நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெளிவூட்டிய போதிலும், அதனை ஏற்க மறுத்த பொலிஸார், இறுதியாக குருக்களுக்கும் உபய காரருக்கும் மேலதிகமாக ஒருவருக்குமாக மூவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குகின்றோம் எனத் தெரிவித்து மூவருடன் அன்றைய தினம் சங்காபிஷேகத்தை நடத்துமாறும் பணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X