2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சஜித்துக்கு ம.மு. கூ ஆதரவு

Editorial   / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள், தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கனெனவும் மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவரகள் சிந்தித்ததே கிடையாதெனவும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டும் தற்போதைய நிலையில் இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் சிறந்த தெரிவாகவும் உள்ள சஜித் பிரேமதாஸவுக்கு தங்களின் ஆதரவை வழங்கும் தீர்மானத்தை  தாங்கள் எடுத்திருப்பதாகவும், அவர் கூறினார்.

ஆதரவு வழங்குவதற்காக அவரிடமிருந்து தாங்கள் உத்தரவாதம் எதனையும் பெறப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், மாறாக தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் சிலவற்றை அவர்களிடம் கூறி அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க தாங்கள் திடமாகச் செயற்படுவோமெனவும் கூறினார்.

குறிப்பாக பல பிரச்சினைகளை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மேலும் உரிமை விடயத்திலும் சில தீர்க்கமான விடயங்களை சிந்தித்திருப்பதாகவும் கூறினார்.

இதற்கமைய, மிக விரைவில் சஜித் பிரேமதாஸவை நேரில் சந்தித்து பேசுவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகள் குறித்து பேசுவோமெனவும் கூறினார்.

அதேபோல், விரைவில் தமது அழைப்பை ஏற்று அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதி அமைச்சர் பாலித தேவ பெரும ஆகியோர் வடக்குக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு அழைத்து செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X