Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
சாரதிகள் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். இல்லையேல் நாடு சுடுகாடாகும் என்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
முழங்காவில் நடைபெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எந்த ஒரு விடயத்தை நாம் செய்வதானாலும் சட்டத்தைக் கடைப்பிடித்தே செய்யவேண்டும். ஒரு நாட்டில் ஒரு நிமிடம் சட்டம் செயலிளக்குமானால், அந்த நாட்டின் அனைத்து நிர்வாகச் செயற்பபாடுகளும் தலைகீழாகும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு நாட்டின் சகல துறையினரும் அந்தந்த துறைசார்ந்த சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனவே இதுதொடர்பில் சாரதிகள் மிகவும் அவதானமாக ஒவ்வொரு வீதி சமிக்கைகளையும் கடைப்பிடித்து வீதியில் செல்லும் ஏனைய பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
எமது மாகாணத்தில் கடந்த ஆண்டு இயற்க்கை மரணத்தைவிடவும் வீதி விபத்துக்களாலேயே அதிக மரணம் சம்பவித்துள்ளதாக தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு பெருமளவில் சாரதிகளின் அசமந்தப்போக்கே பிரதான காரணமாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு உயிரும் விலைம திப்பற்றது. அதனை பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும். இவ்வாறு அசமந்தப்போக்கில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்குட்ப்படுத்தப்படவேண்டும். இந்த விடயத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் காவல்த்துறையினரும் நீதித்துறையும் மிகவும் சரியான முறையில் இவர்களுக்கு தண்டனைகளை வழங்கும் பட்சத்திலேயே இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் குறைத்து உயிர்களைக் காக்கமுடியும்.
இதுவரை நாம் விபத்துக்களில் இழந்த உயிர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சம்மந்தப்பட்ட போக்குவரத்துத் தரப்பினர் எதிர்காலத்தில் சட்டத்தை வலுவாகக் கடைப்பிடித்து விபத்துக்களைக் கட்டுப்படுத்தவேண்டும். எதிர்வரும் காலத்தில் எமது மாகாணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்.
அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காத சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago