2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு: நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று  வியாழக்கிழமை  (20) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள், நீதவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான செய்திகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, வடமாகாண சட்டத்தரணிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,  நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களில் இவ்வாறு அவதூறான செய்திகள் வெளியாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காது, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,  மன்னார் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள், மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறவிருந்த சகல வழக்கு விசாரணைகளும் மற்றுமொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X