2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த அது சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்;கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மூன்று முறிப்பு பனங்காமம் சிறாட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பெருமளவான வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

இதனைக்கட்டுப்;படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்;கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இப்பகுதியில் சட்டவிரோதமான மரக்;கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்று இளம்குடும்பஸ்தரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான குற்றச்செயல்களால் பலருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை கட்;டுப்படுத்த அது சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X