2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 7 பேர் கைது

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொழும்பு, இலங்கை மின்சார சபையிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதியிலேயே இந்த எழுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்மானிக்குள் கம்பியை வைத்து மின்மானியின் வாசிப்பை குறைத்துக்காட்டிய குற்றச்சாட்டில் இருவரும் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவரும் இன்று திங்கட்கிழமை (14) காலையில் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற 4 பேர் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X