Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
பிணை நிபந்தனையை மீறிய இரண்டு பெண்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, நேற்றுப் புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.
கொடிகாமம், தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்கள், அவர்கள் வசிக்கும் கிராமஅலுவலரின் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக் கடதாசியினை நீதிமன்றில் சமர்பிக்க தவறியதால் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்ட இந்த இரண்டு பெண்களும், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டனர். இவர்களுக்குப் பிணை வழங்கும் போது, கிராமஅலுவலரின் உறுதிப்படுத்திய சான்றிதழை 1 வார காலத்துக்குள் நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
எனினும், அவர்கள் அதனை இதுவரையில் சமரப்பிக்காத காரணத்தால் அவர்களை மீண்டும் கைதுசெய்ய உத்தரவிட்ட நீதவான், அவர்களை விளக்கமறியலில் வைத்தார்.
4 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago