2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சந்தைப்படுத்துவது கடினமாகவுள்ளது

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்


சுயவேலைவாய்ப்புக்களை வழங்கி அதன் மூலம் உருவாக்கப்படுகின்ற பொருட்களை சந்தைப்படுத்துவது கடினமாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் கண்காட்சி நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வடபகுதியிலே வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்காக விசேடமாக சிறுகைத்தொழில், சுய வேலை வாய்ப்புக்கள் என்பவற்றை நாங்கள் அறிமுகப்படுத்துகின்ற போது அதனாலே உருவாக்கப்படுகின்ற பொருட்களை சந்தைப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்த வருகின்றது.

இந்தப் பொருட்களை சந்தைப்படுத்துவது நாட்டிலேயும் பெரும் சவாலாக இருக்கின்றது. அதனால் சுயமாக வேலை செய்வதற்கும், அவற்றை சரியான முறையில் சந்தைப்படுத்துவதற்கும் மிகப் பெரும் சவால்கள்; காணப்படுகின்றது.

இவ்வாறு கஸ்ரப்படுகின்ற இந்தப் பிரதேச மக்களுக்கு ஏற்றுமதியாளர்கள் பலர் உருவாகினால் அதன் மூலமாக பெருமளவு ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதுடன் வருமானமும் அதிகரிக்கும். ஆகையினால் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்ற இந்த வேலைத் திட்டத்தை வரவேற்பதுடன் அது வெற்றி பெற வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X