2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சபையை முடக்கி போராட்டம்

George   / 2017 மே 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன்

வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி, சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (09) இடம்பெறவிருந்த அமர்வினை அடுத்தே குறித்த முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் போது, சபைக்கு வருகை தந்த முதலமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களை அவைக்கு செல்ல விடாது தடுத்த போது, முதலமைச்சர் பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.

முதலமைச்சரின் கருத்தினை ஏற்க மறுத்த பட்டதாரிகள், நடைபெறவுள்ள (மாகாண சபை அமர்வின் போது) இன்றைய தினமே, தமக்கான இறுதியான முடிவினை தெரிவிக்குமாறு கேட்டு முதலமைச்சரை மாகாண சபைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தினார்கள்.

இதனையடுத்து முதலமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இதன் பின்னர் பட்டதாரிகள் ஏனைய உறுப்பினர்களை உள்ளே செல்லவிடாது தடுத்ததுடன், தமது போராட்டத்தினை தொடர்ந்தும் மாகாண சபையின் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X