2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர் தினம்

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'பெண்களின் பங்களிப்புக்களை அங்கீகரிப்பதனூடாக சம உரிமைகளைப் பேணுவோம்' என்னும் தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (11) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.

கல்வி, விவசாயம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்த பெண்கள் இந்நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் அ.நடராஜன், சிறப்பு விருந்தினராக யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ திணைக்கள தலைவி திருமதி தேவரஞ்சினி சிவாஸ்கரன், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் பவானி ஞானச்சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X