2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சமாதானச் செய்தியுடன் பறந்த புறாக்கள் 4 1/2 மணித்தியாலங்களில் கொழும்பை அடைந்தன

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

சமாதானத்தையும் அன்பையும் வலியுறுத்தி, பருத்தித்துறை சக்கோட்டை பகுதியிலிருந்து கொழும்பு வத்தளைக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14), 12 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

ஆர்.டோனி என்பவர் இப்புறாக்களுக்கான பயிற்சிகளை அளித்துள்ளார். ஹாட்லி கல்லூரி அதிபர் க.முகுந்தன், பருத்தித்துறை பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, புறாக்களைப் பறக்கவிட்டனர்.

கால்களில் செய்திக் குறிப்பைத் தாங்கிய புறாக்கள் கற்கோட்டையிலிருந்து காலை 8.12 மணிக்கு பறக்கவிடப்பட்டன.

இதில் 4 புறாக்கள் 12.55 மணிக்கும், 6 புறாக்கள் 1.15 மணிக்கும், மிகுதி 2 புறாக்கள் அதனைத் தொடர்ந்தும் உரிய இடத்துக்குச் சென்றடைந்தன என ஆர்.டோனி தெரிவித்தார்.

பண்டைய காலங்களில், இவ்வாறு புறாக்கள் மூலம் செய்தியனுப்பும் வழக்கம் இருந்ததாகவும் அது தற்போது வழக்கொழிந்து விட்டதாகவும், அதனை நினைவுபடுத்தவே இம்முயற்சியைத் தான் மேற்கொண்டதாகவும் ஆர்.டோனி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X