2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் ஏற்பாட்டில், 3ஆவது சமகால முகாமைத்து சர்வதேச ஆய்வரங்கம். எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

இம்முறை இவ் ஆய்வரங்கம் 'சமகால விடயங்களுக்கான நுணுக்கமான தீர்வுகள்' எனும் கருப்பொருளை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இதற்கமைய, கணக்கீடும் நிதியும் வங்கியும் காப்புறுதியும் வணிகப் பொருளியல் வணிகமும் சட்டச்சூழலும் கலாசாரமும் நெறிமுறைகளும் முயற்சியாண்மையும் செயற்பாட்டு முகாமைத்துவமும் சூழல் முகாமைத்துவமும் சமூகப் பொறுப்பும் சுகாதார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாடலும் சர்வதேச வியாபாரமும் நிதியும் அறிவு முகாமைத்துவம், சந்தைப்படுத்தலும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவமும் செயற்பாட்;டு ஆய்வு, நிறுவன நடத்தையும் மனிதவள அபிவிருத்தியும், பிராந்திய மற்றும் சமூகத் திட்டமிடல், தந்திரோபாய முகாமைத்துவம், சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வு முகாமைத்துவம், நகர முகாமைத்துவம் ஆகிய தலைப்புக்களில் எவையேனும் ஒன்றைப் பற்றி ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க முடியும்.

ஆய்வுச் சுருக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படவேண்டும். ஆய்வுச் சுருக்க ஏற்பு மார்ச் மாதம் 21ஆம் திகதி அறிவிக்கப்படும். தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகளை ஏப்ரல் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும். மே 31ஆம் திகதி ஆய்வு ஏற்று அறிவிக்கப்படும்.

தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி தொடக்கம் ஆய்வரங்கத்தில், ஆய்வுக்கட்டுரைகளை எடுத்துக்கொள்ளும் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு ஆய்வரங்கு தலைவரும் முகாமைத்துவ வணிகபீட பீடாதிபதி தி.வேல்நம்பி, ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளர் கலாநிதி உ.ராஜ்உமேஸ் ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X