2025 மே 16, வெள்ளிக்கிழமை

சமாதானம் வேண்டி பாதயாத்திரை

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்., வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய நடத்திய புனித திருத்தலப்  பாதயாத்திரை, நேற்று, நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகியது.

இலங்கை மணித்திருநாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி, புனித திருத்தலப் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத்தைச் சேர்ந்த சிதா காசானந்தா சுவாமிகளால், இந்த பாதயாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிவலிங்கம் தாங்கிய ஊர்தியின் முன்னே சிவனடியார்கள் நடைபயணமாக இறைவன் புகழ்பாடியவாறும், ஆடியவாறும் குறித்த பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

மேற்படி பாத யாத்திரை, இன்று  காலை வல்லிபுர ஆழ்வார் கோவிலைச் சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .