2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சரணடைந்தபோது சகோதர்கள் இருவரையும் இராணுவத்தினர் கைது செய்தனர்

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சகோதரன், சகோதரி இருவரும் இறுதி யுத்தத்தின் போது தன்னுடன் சரணடையவந்த போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் தற்போது வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று சனிக்கிழமை (27) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது.

இதில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிக்கின்றனர். 

இதில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கும் போதே புகனேந்திரன் சந்திரகாந்தி இவ்வாறு சாட்சியளித்தார்.

1990 ஆம் ஆண்டு பிறந்த புகனேந்திரன் மதன்ராஜ், 1992 ஆம் ஆண்டு பிறந்த புகனேந்திரன் நிசாந்தினி என்ற இருவரும் சகோதரர்கள். நாம் வன்னியில் வசித்த போது 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் நாம் சரணடைந்தோம். இதன்போது இருவரையும் இராணுவத்தினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் தொடர்பில் இது வரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தாயார் சாட்சியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X