2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சர்ச்சைக்குள்ளாகும் திருமண மண்டபம்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்., மல்லாகம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் திருமண மண்டபம், தங்குமிட விடுதி உள்ளடங்களாக புதிய மூன்று மாடி கட்டட தொகுதி ஒன்றை அமைப்பதற்கு, தனிநபரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரதேச சபை அனுமதி தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பில் தெரிவயவருவதாவது,

மல்லாகம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் புதிய மூன்று மாடி கட்டட தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக வலி.வடக்கு பிரதேச சபை மேற்கொண்டிருந்தது.

இக்கட்டட தொகுதியில் கீழ் தளத்தில் கடைத் தொகுதியும் இரண்டாம் தளத்தில் திருமண மண்டபமும் மூன்றாவது தளத்தில் தங்குமிட விடுதியும் அமைப்பதாகவே, உரிமையாளரால் கட்டிடத்தொகுதி வரை படம் சபையிடம் முன்வைக்கபட்டது.

இதற்கிடையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னர் பாடசாலைக்கு அருகில் மேற்படி கட்டட தொகுதியில் தங்குமிட விடுதி அமைப்பது பிரச்சினைக்குரியது என வலி.வடக்கு தவிசாளர் இவ்வரைபடத்தினை இரத்துச் செய்துள்ளார்.

தங்குமிட விடுதியை விடுத்து கடைத்தொகுதிக்கும் திருமண மண்டபத்துக்குமான வரைபடத்துடன் உரமையாளர் மீள அனுமதிகாக விண்ணப்பித்துள்ளார்.

இதில் பாடசாலைக்கு இடையூறு இல்லாது கட்டட அமைப்பு இருக்குமெனவும் மண்டப சத்தங்கள் வெளிச்செல்லாதவாறு அமைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாகன தரிபிடவசதிகள் உரியமுறையில் அமையும் எனவும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் விண்ணப்பத்தையும் கட்டட அமைவிட சுற்றுச்சூழலையும் பரிசீலணை செய்து பிரதேச சபை அனுமதி வழங்கியது.

திருமண மண்டபத்தால் பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுமென தெரிவித்து, பிரதேச சபை வழங்கிய அனுமதியை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மல்லாகம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால், நேற்று (21) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் திருமண மண்டபத்தை நிறுத்தி கடைத்தொகுதியை மட்டும் மேற்கொள்வதாக, வலி.வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதாக, பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X