Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும்” என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்கவில்லை சர்வதே விசாரணைகள் ஊடாகவே நீதி கிடைக்கும். அந்த நிலையில் இன்று அரசியல் தீர்வும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை உள்ளது.
எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும். அதனை நாம் வென்றெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .