Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 4ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு,“பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கூவர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதன்போது, "விவசாயமும் உணவு விஞ்ஞானமும்", "பொறியியல் தொழிநுட்பம்", "மானுடவியல், சமூக விஞ்ஞானம் மற்றும் சட்டம்", "சுகாதாரமும் மருத்துவ விஞ்ஞானமும்", முகாமைத்துவக் கற்கைகள், வணிகம், தொழில் முயற்சியாண்மை, விருந்தோம்பலும், சுற்றுலாத்துறையும்", "தூய மற்றும் பிரயோக விஞ்ஞானம்" ஆகிய 6 துறைகளில் 121 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும், இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்வியியலாளர்களும் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனி பேர்ணாட் மில்லர், பேராசிரியர் கேயர் ரீவஸ், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தமிழரான பேராசிரியர் நடராஜா ஶ்ரீகரன், ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர் ஸரீபன் எம். லைத், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் முருகேசு சிவபாலன் மற்றும் பேராதேனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலிங்க ரியூடோர் சில்வா ஆகியோர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்துகொண்,டு அமர்வுகளின் ஆரம்ப உரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.
18 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
36 minute ago