2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சளிக் காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழந்தார்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியபோது, மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த மாணவி சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லையெனவும் அதன் காரணமாவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

குடத்தனையில் அமைந்துள்ள குறித்த மாணவியின் வீட்டில் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது, மாணவியுடன் கல்வி கற்ற மேலும் இரண்டு மாணவிகள் அங்கு மயங்கி வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X