Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை 1,500 தொண்டர்களின் உதவியுடன் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணி முதல் 2 மணி வரையில் முன்னெடுக்கவுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.
'மணற்காடு சவுக்கு காடுகளுக்கு தீ வைத்து, சவுக்கு மரங்களை விறகுக்கு எடுக்கும் செயற்பாட்டை அண்மைக்காலமாக சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சவுக்கு காடு அழிவடையும் நிலையில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாகும்.
எதிர்வரும் 22ஆம் திகதி உலக பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்தினத்தில் இராணுவம், பொலிஸார், பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து, சவுக்கு காட்டை பாதுகாப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.
சவுக்கு மரங்களின் கீழுள்ள தீப்பற்றக்கூடிய சருகுகளை முழுமையாக அகற்றல், சவுக்கு மரங்களின் கிளைகளை சுமார் 5 அடி உயரம் அளவுக்கு அகற்றல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். கீழ் மட்டத்திலுள்ள கிளைகளை அகற்றும் போது, காட்டுக்கு தீ வைப்பவர்களை இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.
மணற்காட்டில் தற்போது சுமார் 500 ஏக்கரில் சவுக்கு காடு அமைந்துள்ளது. இதனைப் பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது' என அவர் மேலும் கூறினார்.
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025