Janu / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி, வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது.
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் பேருந்திலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்ட போது, சாரதி அவசரமாக பேருந்தை நகர்த்தியமையால் , அப்பெண் விழுந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது .
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்தின் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ,
இந் நிலையில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினரால் குறித்த பேருந்தின் வழித்தட அனுமதியை இரத்து செய்துள்ளதுடன் பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் , அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எம்.றொசாந்த்
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026