Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மார்ச் 15 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நகரிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் வைத்து சாரதியைத் தாக்கி, அச்சுறுத்திய பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்ட இருவருக்கு தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் சேவைக்காக தரித்து நின்ற பஸ் சாரதியையும் நடத்துனரையும் அச்சுறுத்தி, சாராயம் வாங்கித்தருமாறு இருவர் வற்புறுத்தி உள்ளனர். சாரதி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த குறித்த இருவரும், சாரதி மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான சாரதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரின் முகவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்தியமை மற்றும் சாரதியைத் தாக்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், இரண்டு குற்றச்சாட்டுகளிலும் இருவரையும் குற்றவாளிகள் என நீதிவான் எஸ்.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (13) தீர்ப்பளித்தார்.
“குற்றவாளிகள் இருவரும் முதலாவது குற்றத்துக்காக தலா ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும். இரண்டாவது குற்றத்துக்காக குற்றவாளிகள் இருவருக்கும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது" என நீதிவான் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
20 minute ago
27 minute ago
58 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
58 minute ago
58 minute ago