2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சாவகச்சேரி சர்ச்சை - விசாரணைக்கு அழைப்பு

Freelancer   / 2024 ஜூலை 19 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 5ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. 

அக்களவிஜயத்தில் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த  08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள்  பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது. 

அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு   எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலுக்கு பின்வருவோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு 
02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு 
03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம் 
04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம் 
05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம் 
05.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை   R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X