Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஜூன் 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக, 15 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட பிரேரணையை, வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம் ஆகியோர் இணைந்து வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரேயிடம், நேற்றிரவு (15) யைளித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தழிழரசுக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 17 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு புதன்கிழமை (14) இரவு ஆளுநரிடம் கையளித்தனர்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது வடமாகாண சபையின் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கையொப்பமிட்டு ஆதரவான பிரேரணையை கையளித்துள்ளனர்.
வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராசா, ஜி.குணசீலன், ஆர்.இந்திரராஜா, ரி.ரவிகரன், க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், கே.சிவநேசன், பொ.ஐங்கரநேசன், கே.கனகரட்ணம், ஏ.புவனேஸ்வரன், எஸ்.மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இப்பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இதனை விட இன்னமும் 3 உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago