2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சி.விக்கு எதிராக டெனிஸ் மனு

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.   

மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.   

இந்த மனுவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.   

மூத்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவின் நெறிப்படுத்தலில், சட்டத்தரணி நிலந்தி டீ சில்வா மனுவைத் தாக்கல் செய்தார்.   

தன்மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சட்டத்துக்குப் புறம்பாகப் பதவி நீக்கியிருப்பது தனது சட்டபூர்வமான எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்துள்ளது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.   

இதனடிப்படையில், தான் அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையீடு, தடுத்தல் மேற்கொள்ளக்கூடாது என்று, தடை விதிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.   

முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் தன்னுடைய அமைச்சின் சார்பில் எந்தவோர் அமைச்சரும் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தடை விதிக்குமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X