Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்படும் சிறப்புச் சொற்பொழிவு, 04ஆம் திகதி, யாழ். மாவட்டத்தின் பல கோவில்களில் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில், சிவராத்திரி தினத்தன்று இரவு 7 மணிக்கு புண்ணாலைக்கட்டடுவன் திடற்புலம் அருள்மிகு ஸ்ரீ நரசிங்க வைரவர் தேவஸ்தான மண்டபத்தில், சிவநெறிச்செம்மல் சைவப்புலவர் செ.த.குமரன் 'அன்பே சிவம் ' என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தவுள்ளார்.
இரவு 8.00 மணிக்கு நாரந்தனை சரவனை கர்ணன்தோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிவநெறிச்செம்மல் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் ' சிவ விரதங்களில் சிவராத்திரி விரதம் ' என்னும் தலைப்பிலும் இரவு 10.00 மணிக்கு புங்குடுதீவு மேற்கு பெருங்காடு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனாட்சியம்பாள் சமேதர சோமசுந்தரேஸ்வரர் சிவன் தேவஸ்தானத்தில் சிவநெறிச்செம்மல் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் 'சிவராத்திரி விரத மகிமை' என்னும் தலைப்பிலும் இரவு 11.30 மணிக்கு ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் சிவநெறிச்செம்மல் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் ' சிவனுக்கு உகந்தது சிவராத்திரி ' என்னும் தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
17 minute ago
24 minute ago