2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தொழிற்சங்கத் தலைவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   

இதனால் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாது, குப்பைகள் தேங்கியுள்ளன.  

கடந்த 15ஆம் திகதி, யாழ்ப்பாண மாநகர சபையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் தொழிற்சங்க தலைவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, கைகலப்பாக மாறியது.

அதனால், தொழிற்சங்கத் தலைவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

சம்பவத்தையடுத்து தொழிற்சங்கத் தலைவருக்கு, மாநகர சபை ஆணையாளரால் பணி இடைநீக்கக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.  

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்கத் தலைவரை விடுவிக்க வலியுறுத்தியும் மாநகர சபை ஆணையாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணி இடைநீக்கக் கடிதத்தை, மாநகர சபை ஆணையாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள், நேற்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், யாழ்ப்பாணம் மாநகர கழிவகற்றல் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .