2025 மே 08, வியாழக்கிழமை

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நினைவேந்தலை நடத்த அனுமதி

Kogilavani   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டோரின் 16ஆம் ஆண்டு நினைவு தினம்,  நாளை (26) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தற்போது உள்ள கொரோனா பரவல் அச்சநிலைமையைக் கருத்திற்கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் நடத்த முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X