Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்
சுதுமலை, நவாலி ஆகிய பகுதிகளில் உள்ள இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், மொட்டை சிவா என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபர், நேற்று (14) இரவு, மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், அரசடிப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, கைதுசைய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே ஜசோ என அழைக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, நேற்று முன்தினம் பிரதான சந்தேகநபரான மொட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் மேலும் 5 பேருக்குத் தொடர்பிருப்பதாகவும், பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .