Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து, சேவையை மீள ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட காசநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சி. யமுனானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - பண்ணையில் அமைந்துள்ள காசநோய் தடுப்பு அலகில் நடைபெற்ற ஓடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையானது, கடந்த வருடம் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எனினும், மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான எந்தவோர் ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.
அந்தக் காணியை வேறொரு தேவைக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகக் கூறிய அவர், அதனை காசநோய் வைத்தியசாலையாக மீளப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் விரும்பவில்லையெனவும் தெரிவித்தார்.
எனினும், இந்த காசநோய் வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காசநோயை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துட், யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயிால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் காசநோயால் பாதிக்கப்பட்ட 303 பேரில் 12 பேர் உயிரிழந்ததாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago