2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சைவநெறித் தமிழ் மொழித் தேர்வு 2017

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

சைவ பரிபாலன சபையினால் வருடாந்தம் நடத்தப்படும், அகில இலங்கை சைவநெறித் தமிழ் மொழித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களிடையே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் இப்பரீட்சை நடாத்தப்படுவதுடன், தரம் 2 முதல் 11 வரையான மாணவர்களிடத்தே சைவத்தையும் தரம் 2 முதல் 8 வரையான மாணவர்களிடையே தமிழ் மொழியையும் தரம் 12 மாணவர்களுக்கு இந்து நாகரீகம் மற்றும் இந்து சமயம் ஆகிய பாடங்களுக்கான அறிவையும் வளர்க்கும் வகையில், இப்பரீட்சை நடத்தப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை,

இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், “கல்விச் செயலாளர், சைவ பரிபாலன சபை, இல 60, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X