2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சொகுசு பஸ் விபத்து : 4 பேர் படுகாயம்

எஸ்.என். நிபோஜன்   / 2019 மார்ச் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்துடன் ஏற்படவிருந்த விபத்தை தவிர்ப்பதுக்காக வீதியின் மறுபக்கத்துக்கு பஸ்ஸை செலுத்த முற்பட்டபோது, மரத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X